திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவிலை சுற்றி 12 காவுக்கோவில்கள் உள்ளன. இதில் ஸ்ரீராமன்கோணம் தர்ம சாஸ்தா ஆலயம் தற்போது அழகுற புதுப்பிக்கப்பட்டுள்ளது. மூலவராக ஐயப்பசுவாமி இங்கு காட்சி தருகிறார். இக்கோவிலில் இன்று 31-ம் தேதி காலை கணபதி ஹோமத்தை தொடர்ந்து வேதமந்திரம் ஒலிக்க, மேளதாளம் முழங்க தந்திரி கோகுல் நாராயணரு தலைமையில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பெண்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.