குமரி மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் கெ எம் பாரதி தலைமையில், இன்று 9-ம் தேதி காலை 6 மணியளவில் விளவங்கோடு வட்ட பகுதியில் ரோந்து பணியின் போது, வெள்ளிகோடு பகுதியில் வேகமாக சென்ற சொகுசு காரை துரத்தி சென்றனர். ஓட்டுநர் வாகனத்தை மின் கம்பத்தில் மோதிவிட்டு தப்பி ஓடினார். காரில் இருந்து சுமார் 1500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த அரிசி காப்புக்காடு அரசு நுகர்பொருள் வாணிபக்கழக கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது. வாகனம் விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது.