நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,
நேற்று (23-02-2026) மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த பெண், பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்து தீக்குளிக்க முயன்றார். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக மீட்கப்பட்ட அப்பெண் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டு, அவற்றுக்கு தீர்வு காணாமல் கிடப்பில் போடுவதாக ஆட்சியர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.