குமரி: மதுப்பழக்கத்தால் பிரிந்த மனைவி; தொழிலாளி தற்கொலை

985பார்த்தது
குமரி: மதுப்பழக்கத்தால் பிரிந்த மனைவி; தொழிலாளி தற்கொலை
காப்புக்காடு, மாராயபுரம் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி பாபுராஜ் (62), மதுப்பழக்கத்தால் மனைவி வசந்தா மற்றும் மகளுடன் பிரிந்து தனியாக வசித்து வந்தார். நேற்று (ஆகஸ்ட் 20) அவர் வீட்டில் நைலான் கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் காணப்பட்டார். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், அவரது மனைவி வசந்தா, பாபுராஜின் உடலை குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, புதுக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி