கர்நாடகாவில் டிஜிட்டல் அடிமைத்தனத்தை தடுக்க 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்க அம்மாநில அரசு பரிசீலித்து வருகிறது. இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க கல்வி மற்றும் உளவியல் நிபுணர்கள் அடங்கிய உயர்மட்ட குழு ஒன்றை அமைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிபுணர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், குழந்தைகளின் நலன் கருதி மொபைல் பயன்பாட்டிற்கான கட்டுப்பாடுகள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.