நடிகர் கார்த்திக் வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யின் தவெகவுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2006ஆம் ஆண்டு முதல் தேர்தல் சமயங்களில் மட்டும் தென்படும் கார்த்திக், பார்வர்டு பிளாக் கட்சியில் இருந்து விலகி 2009-ல் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியை தொடங்கினார். பின்னர் அதனை கலைத்துவிட்டு, 2018-ல் மனித உரிமை காக்கும் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். கடந்த 2 தேர்தல்களிலும் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த கார்த்திக், 2026-ல் விஜய்யுடன் கைகோர்க்கிறாராம்.