மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாதிக்கும், தேமுதிக நிறுவனர் விஜயகாந்துக்கும் நீண்ட கால தொடர்பு உள்ளதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் இன்று (பிப்., 19) செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'பழம் நழுவி தேன் கலந்த பாலில் விழுந்துள்ளது. எங்கள் கூட்டணியின் வெற்றியை தலைவர் விஜயகாந்தின் காலடியில் சமர்ப்பிப்போம். தேமுதிக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளின் விருப்பப்படியே திமுக கூட்டணியில் இணைந்துள்ளோம்' என்று தெரிவித்தார்.