முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவியும், எம்பி கனிமொழியின் தாயுமான ராசாத்தி அம்மாள் உடல்நலக்
குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமத
ிக்கப்பட்டுள்ளார். தற்போது 80 வயதாகும் அவர், அண்மையில் உடல்நலக் கோளாறு காரணமாக ஜெர்மனி சென்று சிகிச்சை எடுத்தார். தற்போது மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.