கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கைதாகி சிறையில் உள்ள தவெக நிர்வாகிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், நிர்வாகி பவுன்ராஜ் ஆகிய இருவரையும் கரூர் நீதிமன்றம் விடுவித்தது. கடந்த மாதம் 27ஆம் தேதி தவெக விஜய் நடத்திய பரப்புரை கூட்டத்தில், 41 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் நிர்வாகி பவுன்ராஜை கைது செய்தனர்.