கரூர் கூட்ட நெரிசலில் பலியான 41 குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய் விரைவில் நேரில் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று சந்திக்காமல், அவர்களை ஒரே இடத்திற்கு வரவழைத்து அவர் ஆறுதல் தெரிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக புஸ்ஸி ஆனந்த் தலைமையில் 10 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவானது, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை வேலுச்சாமிபுரத்திற்கு பேருந்துகளில் அழைத்து வர இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.