கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் உரிமையாளரிடம் சிபிஐ அதிகாரிகள் இன்று (நவ.6) விசாரணை நடத்தி வருகின்றனர். கரூரில் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பிரசார கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் புகுந்ததால் கூட்ட நெரிசல் என புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து, தற்போது ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் உரிமையாளரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.