கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படவுள்ளது. தவெக சார்பில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.20 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களை தவெக சேகரித்து வருகிறது. விஜய் அல்லது தவெக நிர்வாகிகள் நேரில் சென்று நிதியுதவி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.