விஜய்யின் கரூர் பரப்புரை கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகி மதியழகன் விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சிறப்பு புலனாய்வு குழுவினரின் விசாரணைக்கு பின் கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் மதியழகன் இன்று (அக்.11) ஆஜர்படுத்தப்பட்டார். தொடர்ந்து, இந்த மரணம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தற்போது வரை தலைமறைவாக உள்ளார்.