கரூர் சம்பவம் குறித்து நடிகர் அஜித்குமார் கருத்துக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், “கரூர் சம்பவத்திற்கு உண்மையாக யார் (விஜய்) பேட்டி கொடுக்க வேண்டுமோ அவரை ஊடகங்கள் இன்னும் பேட்டி எடுக்கவில்லை. அவர் பேட்டி கொடுக்க விரும்பவில்லையா என்று தெரியவில்லை. நடிகர் அஜித்தின் பேட்டியை நான் முழுமையாக பார்க்கவிலை. அவரது கருத்து அவருடைய சொந்த கருத்து. அதற்கு நான் பதில் கூற விரும்பவில்லை. அவர் எது கூறினாலும் அது பாராட்டத்தக்கது” என்றார்.