கரூர் கூட்ட நெரிசல் குறித்து, நடிகர் அஜித்தின் கருத்துக்கு எதிராக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலளித்துள்ளார். மதுரையில் இன்று (நவ.2) செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் அஜித் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, “அவர் இந்த கருத்தை எதற்காக சொன்னார் என தெரியவில்லை. அடுத்த படத்திற்கு ஷூட்டிங் போக போறாரு போல, அதான் கருத்து சொல்லியிருக்கார். ஊடகங்களில் செய்தி வரவேண்டும் என கூறியிருக்கிறார் போல” என தெரிவித்துள்ளார்.