கரூர் கூட்ட நெரிசல் விபத்து தொடர்பான வழக்கில் CBI தனது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, நேற்று (நவ.4) 12 காவல் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்று மேலும் 2 காவல் உதவி ஆய்வாளர்கள் விசாரணைக்காக ஆஜராகியுள்ளனர். இந்த சம்பவத்தின்போது பாதுகாப்பு மற்றும் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளிடம் சிபிஐ தீவிரமாக விசாரித்து வருகிறது.