கரூர் நெரிசல் வழக்கு: அவசர விசாரணைக்கு மதுரை கிளை மறுப்பு

4572பார்த்தது
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்க கூடாது என்ற வழக்கை தற்போதைக்கு அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தை அவசர வழக்காக எடுக்க முடியாது என்றும், முறைப்படி மனுவாக தாக்கல் செய்தால் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இதனால் இந்த வழக்கை முறைப்படி தாக்கல் செய்யும் பணிகளில் மனுதாரர் தரப்பு ஈடுபட்டுள்ளது.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி