கரூர் துயரம்.. உச்ச நீதிமன்றத்தில் 5 வழக்குகள் விசாரணை

17பார்த்தது
கரூர் துயரம்.. உச்ச நீதிமன்றத்தில் 5 வழக்குகள் விசாரணை
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக 5 வழக்குகள் இன்று (அக்., 10) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. தவெகவின் மேல்முறையீட்டு மனு உள்ளிட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் மகேஷ்வரி, அஞ்சாரியா அமர்வு விசாரிக்கிறது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மறுத்ததை எதிர்த்து பலர் மேல்முறையீடு செய்துள்ளனர். தமிழ்நாடு அரசின் சார்பில் 4 வழக்கறிஞர்கள் ஆஜராகின்றனர்.