கரூர் துயர சம்பவம்.. உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை

11பார்த்தது
தவெக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று (டிச.12) தொடங்கியது. கரூர் துயரச்சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைத்த உத்தரவிற்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்றைய விசாரணையில், ‘தமிழக அரசு அமைத்த ஒரு நபர் ஆணையத்திற்கு விதித்த தடையை நீக்க வேண்டும்’ என அரசுத்தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. மேலும், விதிமுறைகளை வகுப்பதற்கும், நிவாரணம் பரிந்துரைக்கவுமே ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: குமுதம்

தொடர்புடைய செய்தி