கரூரில் கார் மோதி 3 தொழிலாளர்கள் படுகாயம்

2பார்த்தது
கரூரில் கார் மோதி 3 தொழிலாளர்கள் படுகாயம்
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம், அக்கரைக்காய்பட்டியைச் சேர்ந்த 38 வயதான கூலித்தொழிலாளி பழனிச்சாமி, கடந்த 31 ஆம் தேதி சக தொழிலாளர்களுடன் சி. கூடலூரில் தார் சாலை போடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தினகரன் ஓட்டி வந்த கார் மோதியதில் பழனிச்சாமி, பெருமாள், சக்திவேல் ஆகிய மூவர் படுகாயமடைந்தனர். அவர்கள் கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பழனிச்சாமி அளித்த புகாரின் பேரில் சின்னதாரபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி