இராஜேந்திரம் கிராமத்தில் நாய் கடித்து ஆட்டுக்குட்டி பலி

71பார்த்தது
இராஜேந்திரம் கிராமத்தில் நாய் கடித்து ஆட்டுக்குட்டி பலி
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள இராஜேந்திரம் கிராமத்தில் தெரு நாய்கள் கூட்டமாக சுற்றித் திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பெருமாள் கோவில் தெரு, சிவன் கோவில் தெரு, அக்ரகாரம், ரைஸ் மில் தெரு, காளியம்மன் கோவில் தெரு போன்ற பகுதிகளில் நாய்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. கடந்த சில நாட்களில் 4 பேர் நாய் கடித்து காயமடைந்து குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும், 5 மாத ஆட்டுக்குட்டி ஒன்றும் நாய் கடித்து பலியாகியுள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி