சின்னதாராபுரத்தில் பைக்கில் தடுமாறி விழுந்த கொத்தனார் பலி

0பார்த்தது
சின்னதாராபுரத்தில் பைக்கில் தடுமாறி விழுந்த கொத்தனார் பலி
கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் டி. வெங்கிடபுரம் பகுதியைச் சேர்ந்த 38 வயதான கொத்தனார் பெஞ்சமின், நேற்று பள்ளப்பாளையம் அருகே ஆனூர் பேருந்து நிறுத்தம் அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது தானாக தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையிலும் காலிலும் பலத்த காயமடைந்த அவரை கரூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து அவரது தந்தை டேவிட் அளித்த புகாரின் பேரில் சின்னதாராபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி