குளித்தலையில் கல்லூரி மாணவன் உடல் உறுப்புகள் தானம்

1317பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியைச் சேர்ந்த 19 வயது கோகுல்ராஜ், திருச்சி தனியார் கல்லூரியில் பி. காம் 2 ஆம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 17ஆம் தேதி வாகன விபத்தில் மூளைச் சாவு ஏற்பட்டதால், அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. திருச்சி தனியார் மருத்துவமனையில் இந்த உறுப்பு தானம் நிகழ்ந்தது. கோகுல்ராஜின் இல்லத்தின் முன்பு அவரது உடல் வைக்கப்பட்டபோது, நகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வு அவரது குடும்பத்தினரையும், அப்பகுதி மக்களையும் நெகிழச் செய்தது.

தொடர்புடைய செய்தி