கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, புறவைப்பாளையத்தை சேர்ந்த 43 வயது கட்டிட தொழிலாளி ரங்கன், மது போதையால் ஏற்பட்ட குடும்ப தகராறில் கடந்த 15 ஆம் தேதி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். படுகாயமடைந்த அவர் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி ஜோதி அளித்த புகாரின் பேரில் சின்னதாராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.