அரவக்குறிச்சிகள் பைக்கில் சென்ற மூதாட்டி படுகாயம்

265பார்த்தது
அரவக்குறிச்சிகள் பைக்கில் சென்ற மூதாட்டி படுகாயம்
திண்டுக்கல் பென்சனர் தெருவைச் சேர்ந்த 76 வயதான லட்சுமி, தனது மகன் சண்முக குமார் ஓட்டிச் சென்ற பைக்கில் பின்னால் அமர்ந்திருந்தார். அரவக்குறிச்சி சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, மகன் திடீரென பைக்கை நிறுத்தியதால் லட்சுமி தடுமாறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்த அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து லட்சுமியின் சகோதரர் மணிகண்டன் அளித்த புகாரின் பேரில், அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you