கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பர் கோவில் அருகே பகவதியம்மன், கருப்பண்ணசாமி ஆலயத்தின் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, ஶ்ரீ பகவதி அம்மன், கருப்பண்ண சுவாமிக்கு சம்வத்சராபிஷேக யாக பூஜை மற்றும் அபிஷேக ஆராதனை வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.