திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த திருமலைசாமி (72), நேற்று அரவக்குறிச்சி சாலையில் நடந்து சென்றபோது அருகில் இருந்த வடிகால் வாய்க்காலில் தவறி விழுந்து தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கரூர் அரசு மருத்துவமனையில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவரது மகன் சுரேஷ்குமார் அளித்த புகாரின் பேரில் அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.