கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுக்கா ஈசநத்தம் கஸ்பா தெருவைச் சேர்ந்த பாரி (52) என்பவர், கடந்த 28ஆம் தேதி பாகநத்தம் பெட்ரோல் பங்க் அருகே ஸ்கூட்டியில் சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி மலர்விழி அளித்த புகாரின் பேரில், வெள்ளியணை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.