கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஆர். டி மலை ஸ்ரீ விராச்சிலேஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மன் திருக்கோவிலில், சிதம்பரம் போல் வருடத்திற்கு 6 முறை மட்டும் நடைபெறும் மாசி மாத பிரதோஷ பூஜை இன்று நடைபெற்றது. இதில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.