பள்ளப்பட்டியில் தவெக சார்பில் முஹைதீன் ஆண்டவர் கஸ்தூரி விழா

1பார்த்தது
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த பள்ளப்பட்டியில், தவெக சார்பில் முஹைதீன் ஆண்டவர் கந்தூரி விழா பள்ளப்பட்டி சுல்தார் ஹபிபுல்லா மஹாலில் நடைபெற்றது. ந. தலைவர் தவ்ஃபீக் அலி தலைமையில் நடந்த இந்த விழாவில், திருச்சி மண்டல வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் அரசு, கரூர் மேற்கு மா. பொருளாளர் ஆறுமுகம், அரவக்குறிச்சி மேற்கு ஒ. தலைவர் கார்த்தி, அரவக்குறிச்சி கிழக்கு ஒ. தலைவர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். விழாவின் ஒரு பகுதியாக, பள்ளப்பட்டி நகராட்சியின் தூய்மை பணியாளர்கள், அரசு மருத்துவமனை செவிலியர்கள், மின்வாரிய ஊழியர்கள் என பலருக்கும் சிறப்பு கந்தூரி அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி