கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதி திமுக சார்பில், முனைவோர்கள், சமூக சேவகர்கள், கல்வியாளர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் விவசாய அமைப்புகளுடன் கலந்துரையாடல் கூட்டம் குளித்தலை தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் திமுக விவசாய அணிச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு அரசு டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ. கே. எஸ். விஜயன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்றார். இந்த சந்திப்பு விவசாயிகளின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக அறிந்துகொள்ளும் நோக்கில் நடைபெற்றது.