இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கரூர் மாவட்டம் 134 அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரவக்குறிச்சி வட்டம் கரடிப்பட்டி கிராமத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர் வாக்காளர்களுக்கு கணக்கெடுக்கும் படிவத்தினை வழங்கி வருவதை கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது உதவி ஆணையர் (கலால்) முருகேசன் உள்ளிட்ட அரசு அலுவலர்களும் உடனிருந்தனர்.