மாயனூர் கதவணைக்கு திடீர் நீர் வரத்து அதிகரிப்பு

89பார்த்தது
மேட்டூரில் இருந்து கரூர் மாயனூர் கதவணைக்கு இன்று காலை 6 மணி நிலவரப்படி 2857 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. தற்போது இன்று மாலை 4 மணி நிலவரப்படி கூடுதலாக 3897 கன அடி நீராக அதிகரித்து 6754 கன அடி நீர் மாயனூர் கதவணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அணையின் மொத்த கொள்ளளவு 984. 95 கன அடி நீராக உள்ளது. கதவணையில் 5634 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. தென்கரை பாசன வாய்க்கால் 500 கனஅடி நீர், புதிய மற்றும் பழைய கட்டளை மேட்டு வாய்க்காலில் 600 கன அடி நீர், கிருஷ்ணராயபுரம் கிளை வாய்க்காலில் 20 கன அடி நீர் பாசனத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you