கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வேலம்பாடியைச் சேர்ந்த 30 வயதான பூபதி, மதுப்பழக்கத்தால் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். தன்னைத்தானே கத்தியால் கழுத்தை நெறித்து மிரட்டியதால், அவரது மனைவி குழந்தையுடன் சகோதரி வீட்டிற்குச் சென்றுவிட்டார். பின்னர் வந்து பார்த்தபோது, பூபதி தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து அவரது மனைவி ஜோதிலட்சுமி அளித்த புகாரின் பேரில், அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.