கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா சீத்தப்பட்டி காலணியை சேர்ந்த திவ்ய பாரதி (29) மற்றும் அவரது தந்தை ரவிச்சந்திரன், நவீன் குமார் ஆகியோர் நேற்று முன்தினம் மலைக்கோவிலூர் பாலம் அருகே ஸ்கூட்டி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர். நவீன் குமார் தலையில் பலத்த காயமடைந்து பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திவ்ய பாரதி அளித்த புகாரின் பேரில் அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.