வெங்கமேடு: டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல்; ஒருவர் படுகாயம்

60பார்த்தது
கரூர் மாவட்டம், வெங்கமேடு, என் எஸ் கே நகர் அருகே கலைஞர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சேகர் வயது 45. இவர் மார்ச் 16ஆம் தேதி மாலை 4: 30 மணி அளவில், கரூர் - வேலூர் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் வெங்கமேடு ரயில்வே பாலத்தில் செல்லும்போது, எதிர் திசையில், வெங்கமேடு புளியமரம் தெருவைச் சேர்ந்த கமாலுதீன் வயது 32 என்பவர் வேகமாக ஓட்டி வந்த மற்றொரு டூவீலர், சேகர் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. 

இதில் பலத்த காயமடைந்த சேகரை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக சேகரின் மகன் சரவணன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய கமாலுதீன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர் வெங்கமேடு காவல்துறையினர்.

தொடர்புடைய செய்தி