அரவக்குறிச்சி அடுத்த ஆண்டிப்பட்டி கோட்டை பகுதியில் தேமுதிக ஒன்றிய செயலாளர் சின்னசாமி இல்லத் திருமண விழாவில் பங்கேற்க தேமுதிக இளைஞர் அணி செயலாளர் விஜய பிரபாகரன் ஆண்டிப்பட்டி கோட்டை பகுதிக்கு வந்தார். அவருக்கு திருமண வீட்டார் பூரண கும்ப மரியாதை அளித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து இசைக்கலைஞர்கள் மேளதாளங்களுடன் தேவராட்டம் ஆடி உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து கட்சி தொண்டர்கள் விஜய பிரபாகரனை மணமக்களைச் சந்திக்க அழைத்துச் சென்றனர். மணமக்களுக்கு நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தார் விஜய பிரபாகரன். அப்போது, திருமண வீட்டில் பங்கேற்ற பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் விஜய பிரபாகரனுடன் இணைந்து குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.