கரூர் - Karur

கவிஞர் யுகபாரதி: திரைப்படப் பாடல்களில் அகம் புறம் பரப்புரை

கரூர் அட்லஸ் கலையரங்கத்தில் நடைபெற்ற 'கரூர் தமிழ் கனவு' தமிழ் மரபு பண்பாட்டு நிகழ்ச்சியில், கவிஞர் யுகபாரதி "திரைப்படப் பாடல்களில் அகம் புறம்" என்ற தலைப்பில் பரப்புரை வழங்கினார். மாணவ, மாணவியரின் கேள்விகளுக்கு பதிலளித்து பரிசுகள் வழங்கினார். திருக்குறள், தமிழ் உரை, கவிதை தொகுப்பு, தமிழ் வளர்ச்சி, தமிழ் பண்பாடு கலை குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் விமல் ராஜ், கொங்கு கல்வி அறக்கட்டளை செயலாளர் விசா சண்முகம், அரசு கலைக் கல்லூரி முதல்வர், கொங்கு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் ஏராளமான மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


கரூர்