கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் மொத்தம் 166 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக, அதிமுக, தவெக வேட்பாளர்களை தவிர்த்து, 154 வேட்பாளர்கள் தங்கள் வைப்புத் தொகையை இழந்துள்ளனர். கரூர் தொகுதியில் அதிகபட்சமாக 79 வேட்பாளர்கள், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 28 பேர், அரவக்குறிச்சி தொகுதியில் 30 பேர், குளித்தலை தொகுதியில் 29 பேர் என மொத்தம் 154 பேர் வைப்புத்தொகையை பறிகொடுத்துள்ளனர்.