கரூர் மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் பலத்த கனமழை பெய்துள்ளது. கரூரில் 20.60 மி.மீ., அரவக்குறிச்சியில் 24.60 மி.மீ., க.பரமத்தியில் 14.60 மி.மீ., குளித்தலையில் 7 மி.மீ., கிருஷ்ணராயபுரத்தில் 31 மி.மீ., கடவூர் தாலுக்காவில் 68 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 165.80 மி.மீ. மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.