கரூர் வேலுச்சாமிபுரம் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட துயர சம்பவத்தை தொடர்ந்து, கரூர் மாவட்டத்தை சேர்ந்த துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், காவலர்கள் என 19 பேரை தெற்கு மற்றும் வடக்கு மண்டலங்களுக்கு பணியிட மாற்றம் செய்து காவல்துறை தலைமை இயக்குனரகம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு பணியில் இருந்த காவலர்களையும் உள்ளடக்கியது.