கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் நடந்த ஆம்புலன்ஸ் விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கடந்த மாதம் 17ஆம் தேதியிலிருந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள், வியாபாரிகள், காவல்துறை அதிகாரிகள், ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் என பலரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று 11 பேர் விசாரணைக்கு ஆஜரான நிலையில், இன்று மேலும் 2 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளனர்.