சிபிஐ அதிகாரிகள், கடந்த மாதம் 17ஆம் தேதி முதல் கரூர் துயர சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். தவெக கூட்ட நெரிசல் ஏற்பட்ட சில நிமிடங்களுக்கு முன்பு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், கரூர் மின்வாரிய அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதன்படி, கரூர் மேற்கு நகர உதவி செயற்பொறியாளர் கண்ணன் மற்றும் கரூர் கோட்ட செயற்பொறியாளர் கண்ணப்பன் ஆகியோர் நேற்று சிபிஐ அதிகாரிகள் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர்.