கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையம் சோதனை சாவடி அருகே நேற்று வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காரில் கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சுரேந்தர் (25) மற்றும் ரவீந்திர பால் சிங் (20) ஆகிய இருவரை கைது செய்தனர். வேலாயுதம்பாளையம் போலீசார் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, ஒரு கார், 2 செல்போன்கள் மற்றும் ரூ. 1,67,856 மதிப்புள்ள 321.225 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.