கரூர் மாவட்டம் குளித்தலை மற்றும் க. பரமத்தி காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த ஜோதிமணி, செந்தில்குமார், பாலகிருஷ்ணன் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 83 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், தோகைமலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஊமைஉடையனுர் பகுதியில் சாமிநாதன் என்பவர் சட்டவிரோதமாக மது விற்றதாக வழக்குப்பதிந்து கைது செய்யப்பட்டார்.