கரூரில் அடையாளம் தெரியாத வாகன மோதி 3 பேர் படுகாயம்

3பார்த்தது
கரூரில் அடையாளம் தெரியாத வாகன மோதி 3 பேர் படுகாயம்
கரூர் அருகம்பாளையம் நேதாஜி நகரைச் சேர்ந்த கோபிநாத் (36) தனது மனைவி இளம்பூரணி மற்றும் மகள் கன்யுகாவுடன் (6) ஸ்கூட்டியில் காளிபாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் மோதி நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் கோபிநாத், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் படுகாயமடைந்தனர். மூவரும் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோபிநாத் அளித்த புகாரின் பேரில் வெங்கமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி