கரூர் சிபிஐ அலுவலகத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் என 17 பேரிடம் விசாரணை நடைபெற்றது. மூன்றாவது நாளாக இன்றும் 8 பேர் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். மேலும், தவெகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அணி திருச்சி மண்டல இணை ஒருங்கிணைப்பாளர் அரசு உள்ளிட்ட 3 நிர்வாகிகள் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். வழக்கறிஞர் அணி நிர்வாகி அரசு பெரிய பை ஒன்றை எடுத்துச் சென்றார். அந்தப் பையில் வீடியோ ஆதாரங்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது.