வாலிபரின் மொபைலை திருடிய பெங்களூரைச் சேர்ந்த 3 பெண்கள் கைது

58பார்த்தது
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட முத்துராஜபுரத்தை சேர்ந்தவர் பிரபு வயது 32. மார்ச் 15ஆம் தேதி கரூர் பஸ் ஸ்டாண்டில் வெள்ளரிக்காய் வாங்குவதற்காக சென்றிருந்தார். அப்போது கர்நாடக மாநிலம் பெங்களூரு ஷரீப் நகரை சேர்ந்த நூரி வயது 35, லட்சுமி வயது 45, லீலா வயது 60 ஆகிய மூன்று பெண்களும் பிரபுவை கண்காணித்தனர்.

 பிரபு வெள்ளரிக்காயை பார்த்து வாங்கிக் கொண்டிருக்கும் வேளையில், அவரது செல்போனை மூவரும் சேர்ந்து களவாடிவிட்டனர். அந்த நேரத்தில் இதனை கண்ட பிரபு கூச்சலிட்டதும், பேருந்து நிலைய வளாகத்தில் இருந்த பொதுமக்கள், மூன்று பெண்களையும் சுற்றிவளைத்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் வந்ததும் அவர்களிடம் ஒப்படைத்தனர். மூவரையும் கைது செய்த கரூர் காவல்துறையினர் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி