கரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். பசுபதிபாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட திருமாநிலையூர் பகுதியில் சுந்தரம் என்பவர் கைது செய்யப்பட்டு, 28 மது பாட்டில்கள் மற்றும் ரூ. 280 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், வாங்கல், சின்னதாராபுரம், பசுபதிபாளையம் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மது விற்ற ராஜலிங்கம், கருப்பத்தாள், திருநாவுக்கரசு ஆகியோரும் கைது செய்யப்பட்டு, 78 மது பாட்டில்கள் மற்றும் ரூ. 350 பறிமுதல் செய்யப்பட்டது.