கரூர் வெண்ணமலை பகுதியில் இனாம் நிலத்தில் உள்ள வீடுகளுக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் சீல் வைக்க முயன்றபோது, சின்ன வடுகபட்டியில் வாடகை வீட்டில் வசிக்கும் கண்ணம்மாள் உள்ளிட்ட 4 வீடுகளின் உரிமையாளர்கள் தற்கொலைக்கு முயன்றனர். உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற அவர்களை, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.